karthin - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : karthin |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 25-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 246 |
புள்ளி | : 105 |
எனது எண்ணங்கள் எனது எழுத்துகளில் எப்போதும் இருக்கும் . . .என்னை தொடர்புகொள்ள :akarthin@gmail.com ,baalakarthik@yahoo.com
நாம்
உண்மையான வரலாறுகளை படிப்பது இல்லை
மறைக்கப்பட்ட(எழுதப்பட்ட) வரலாறுகளை
தான் படிக்கின்றோம். . .
காதலில்
பொய் இருக்கலாம்
ஆனால்,
அந்த
காதலே பொய்யாக இருக்ககூடாது . . . .
காதலால்
நான் கற்றது
எல்லார் முன்பும் சிரிக்கவும் . . . . .
தனிமையில்
கண்ணீர் சிந்தவும் கற்றுகொடுத்தது . . . .
காதலால்
நான் கற்றது
எல்லார் முன்பும் சிரிக்கவும் . . . . .
தனிமையில்
கண்ணீர் சிந்தவும் கற்றுகொடுத்தது . . . .
சனிக்கெழம சாயந்தரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~
நொரம்பு கொட்டுன
கெணத்து மேட்டுல ..நீ
குறும்பா சிரிச்சா
ஊத்து மண்ணு ஒறையுதடி..
வெள்ளக்கல்லு காட்டுல
வெறகு சொமந்து ...நீ
வெரசா நடந்தா
ஒத்தையடி பாத உலகமடி ...
வழுக்குபாற ஓரத்துல
அழுக்குத்துணிய குவிச்சி ..நீ
ஆடி அசஞ்சித் தொவச்சா
ஆத்து ஐரமீனு மெரளுமடி...
நெறிஞ்சிமுள்ளு நெலத்துல
வெச செடிய எரிச்சிட்டு..நீ
நெத்தித் தொடச்சி நின்னா
நெருப்பு செலையா தெரியுறடி ..
- தேன்மொழியன்
எத்தனை முறை
படித்தும் எழுதியும்
சில விடயங்களை
கடைப்பிடித்து வாழ
சிலர் மனம் மறுக்கிறது
மாற்றார் பிள்ளைகளுடன்
உரையாடும் நேரத்தில்
புன்னகை பூக்களை
உமிழும் தந்தையின் முகம்
தன் பிள்ளைகளிடம்
மட்டும் அக்னி கக்கும்
எரிமலையாகிறது
கடற்கரை ஓரத்தில்
எத்துனை மணல் மாளிகை
அமைக்கப்பட்டாலும்
அவை யாரோ ஒருவரால்
கரைக்கப்படுகிறது
விருட்சங்கள்
சுவையான கனிகளை
மட்டுமே அளித்திருந்தும்
சில வேலைகளின்
அவைகளின் கிளைகள்
முறிக்கப்படுகிறது
அறுபது வயதினை
கடந்தப் பின்னும்
இன்னும் ஆறுமாத
குழந்தையாகவே
இருக்கிறான்
அவன் தாயின்
கண்களில் மட்டும்
தந்தையின்
அறிவுரையை
நேற்று (11.1.2015)திருவள்ளுவர் தினத்தையொட்டி மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதை வாசிப்பில் கலந்துகொண்டு கவிபாரதி விருது பெற்றுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ....
அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . . .
அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . . .
நம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நம்மை விட்டு பிரிந்த பொழுது அவரிடம் இருந்த சொத்துக்கள்.....
அதிகாலை கண்விழித்து
அடுக்களை பெருக்கி வைத்து
கண்ணாளன் விழிக்கும்
முன்
வெந்நீர் போட்டு வைத்து
வீடு வாசல்
சுத்தப்படுத்தி
மஞ்சள் நீர்
தெளித்து விட்டு
அரிசி மா அரித்து
அதில்
அழகு மயில் கோலமிட்டு
புகுந்த வீடு செழிக்கவேண்டும் என்று
துளசி மரம் சுற்றி வந்து
பொறுமையோடு புன்னகை
கலந்து
அத்தை மாமன் தாழ்வணங்கி
ஆசி பெற்று வாழ பெண்
பழகிக்கொண்டால்
இன்னோர் ஜென்மம் தேவையில்லை
இவ்வுலகே சொர்க்கம் ஆகிவிடும்..!!!!!
எபோலா எனும் கொடிய நோயை இன்னும் 60 நாட்களில் கட்டுபடுத்த முடியாவிட்டால் உலகம் முழுவதும் இன்நோய் பரவுவதை தடுக்க இயலாத ஒன்றாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை முடிந்தவரை அனைவரிடமும் பகிருங்கள். அப்படியாவது நமது அரசாங்கம் அதற்கான மருத்துவ முன் எச்சரிகை நடவடிக்கை எடுக்கட்டும்.
EBOLA will be out of control in 60 days - WHO
Source: newsreporter.in