சனிக்கெழம சாயந்தரம் - தேன்மொழியன்

சனிக்கெழம சாயந்தரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~

நொரம்பு கொட்டுன
கெணத்து மேட்டுல ..நீ
குறும்பா சிரிச்சா
ஊத்து மண்ணு ஒறையுதடி..

வெள்ளக்கல்லு காட்டுல
வெறகு சொமந்து ...நீ
வெரசா நடந்தா
ஒத்தையடி பாத உலகமடி ...

வழுக்குபாற ஓரத்துல
அழுக்குத்துணிய குவிச்சி ..நீ
ஆடி அசஞ்சித் தொவச்சா
ஆத்து ஐரமீனு மெரளுமடி...


நெறிஞ்சிமுள்ளு நெலத்துல
வெச செடிய எரிச்சிட்டு..நீ
நெத்தித் தொடச்சி நின்னா
நெருப்பு செலையா தெரியுறடி ..

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (10-Jun-15, 3:49 pm)
பார்வை : 208

மேலே