ஏனோ எதுவும் புரியவில்லை - உதயா

எத்தனை முறை
படித்தும் எழுதியும்
சில விடயங்களை
கடைப்பிடித்து வாழ
சிலர் மனம் மறுக்கிறது

மாற்றார் பிள்ளைகளுடன்
உரையாடும் நேரத்தில்
புன்னகை பூக்களை
உமிழும் தந்தையின் முகம்
தன் பிள்ளைகளிடம்
மட்டும் அக்னி கக்கும்
எரிமலையாகிறது

கடற்கரை ஓரத்தில்
எத்துனை மணல் மாளிகை
அமைக்கப்பட்டாலும்
அவை யாரோ ஒருவரால்
கரைக்கப்படுகிறது

விருட்சங்கள்
சுவையான கனிகளை
மட்டுமே அளித்திருந்தும்
சில வேலைகளின்
அவைகளின் கிளைகள்
முறிக்கப்படுகிறது

அறுபது வயதினை
கடந்தப் பின்னும்
இன்னும் ஆறுமாத
குழந்தையாகவே
இருக்கிறான்
அவன் தாயின்
கண்களில் மட்டும்

தந்தையின்
அறிவுரையை
சரியென மனம்
ஏற்கும் போது
தன் அறிவுரையை
தவறுஎன ஏற்க
மறுக்கிறான் மகன்

அவனிக்கே ராசாவாக
இருந்தாலும்
இன்னும் கிடைக்கப்பெறா
புத்திர பாக்கியத்திற்காக
தினமும் அழுது கொண்டுதான்
இருக்கிறான்

சோர்வு பெருக பெருக
நாள் முழுவதும்
உழைத்து இருந்தும்
இரவு இரண்டு மணிக்கெல்லாம்
துயில் பறந்து விடுகிறது
பல குடும்ப தலைவர்களுக்கு

பாதுகாப்பு சாதனம் அணிந்து
சாலை விதிகளை மதித்து
சரியான பாதையில்
மிதமான வேகத்தில் பயணித்தும்
ஏதோ ஒரு வாகனத்திற்கு
விருந்தாகி போகிறான்

நாட்டிகே பாரமாக பலர்
பல்லாண்டு வாழ்ந்திருந்தும்
குடும்ப பாரத்தை சுமப்பவனையே
காலன் விரைவில்
அழைத்துக் கொள்கிறான்

உயிருக்கு உயிராய்
காதலித்து இருந்தும்
சில வேளைகளில்
பிரிவு அவர்களை
கதற வைத்துதான்
பார்க்கிறது

எனக்காக உயிரினையும்
கொடுப்பதற்கும் நண்பர்கள்
பலர் இருந்தும்
அவனை பார்க்கும் போது மட்டும்
என் கண்கள் தானாக கலங்குகிறது
என் மனமும் துடிக்கிறது
அவனும் என் போல்
ஓர் அனாதை என்பதால்

எழுதியவர் : udayakumar (11-Jun-15, 7:58 pm)
பார்வை : 122

மேலே