புகுந்த வீடு பெண்ணுக்கு பூ உலக சொர்க்கம்-கயல்விழி
அதிகாலை கண்விழித்து
அடுக்களை பெருக்கி வைத்து
கண்ணாளன் விழிக்கும்
முன்
வெந்நீர் போட்டு வைத்து
வீடு வாசல்
சுத்தப்படுத்தி
மஞ்சள் நீர்
தெளித்து விட்டு
அரிசி மா அரித்து
அதில்
அழகு மயில் கோலமிட்டு
புகுந்த வீடு செழிக்கவேண்டும் என்று
துளசி மரம் சுற்றி வந்து
பொறுமையோடு புன்னகை
கலந்து
அத்தை மாமன் தாழ்வணங்கி
ஆசி பெற்று வாழ பெண்
பழகிக்கொண்டால்
இன்னோர் ஜென்மம் தேவையில்லை
இவ்வுலகே சொர்க்கம் ஆகிவிடும்..!!!!!