தினக்கூலி
![](https://eluthu.com/images/loading.gif)
எஜமானர் என்று
எவரும் இல்லை
இந்த உலகினில்!
பணம் என்ற
அளவு கோலால்
பல படிகளாய்
வகைபடுத்தி விட்டோம்
இந்த வையகத்திலே !
இரவலாய்
இறைவன் தந்த
இருதய கடிகாரத்தின்
ஓட்டம் நிற்கும்வரை
படைத்தவன் முன்னால்
அனைவரும்
தினக்கூலிதான் !