தனிமையை நாடி

தோளில் தொங்கும்
ஜோல்னா பை ..
முகம் நிறைய தாடி..
மொத்தமான கண்ணாடி..
அவன்
உலகை வெறுத்து
சந்நியாசம் பெற
உயரமான மலையின் மேல்
ஏறிக்கொண்டிருந்தான்..
தனிமையை நாடி !
தூரத்தில் மினுக் மினுக்கென்று
வெளிச்சம்..
மழையின் சாரலில்
தேநீர் அருந்தினான்.
அதைத் தந்தவளை
ஓரக் கண்ணில்
கண்டு ரசித்தான்..
பிறகு ..
தலையில் நீர் தெளித்துக் கொண்டு..
ஊருக்கு திரும்பி
வந்து கொண்டிருக்கிறான்.
பேருந்தில் நல்ல கூட்டம்..
அது அவனுக்கு பிடித்திருந்தது !

எழுதியவர் : கருணா (3-Dec-14, 9:06 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : thanimaiyai naadi
பார்வை : 216

மேலே