விதியின் சிரிப்பு

ஒவ்வொரு முறையும்
பந்தயத்துக்கு
வலுக்கட்டாயமாக
நம்மை அழைத்து..
தோற்கடித்த பின்
நக்கலாக சிரித்து
நகர்கிறது
விதி..!
மண்ணில் விழுந்தவர்கள்
எழ முயற்சிக்கும் முன்
எட்டி உதைத்து
ஏகடியம் பேசி போகிறது
விதி..!
மதி கொண்டு
அதனை வெல்ல முடியும்
மனிதனால்
என்பது தெரியாமல் இருப்பதே
அதன் தலை விதி !