மணப்பெண்ணாகக் காத்திருக்கின்றேன்

உன்னைக் காணாது
தவிப்பில்
துவண்டுதானடா போகின்றேன் நான்!

ஜன்னல் கம்பிகளின் வழி
வெளித் தெரியும் நீலவானமெங்கும்
உன் பிம்பங்களே!

என் வீட்டு வெள்ளை ரோஜாவும்
மலரவே இல்லை
உன் வரவு காணாததால்!

மணச் சேலையில் என்
மனம் மறைத்து
மணம் காணும்
பேதை நானென்று
எண்ணித்தானே விட்டுச்சென்றாய்
என்னை?
காத்திருக்கிறேன் இன்றும் மணப்பெண்ணாகவே!
உனக்காக.....

எழுதியவர் : பபியோலா (7-Nov-14, 7:49 pm)
பார்வை : 498

மேலே