தினமும் காதல் திண்டாட்டமே

பெண்ணே ...
திங்களாய் வந்தாய்
செவ்வாய் திறந்தாய்
பு(த்)தனாய் தெரிந்தாய்
வியாழன் போல் எனை பெரிதென்றாய்
வெள்ளி முளைத்தது என்னுள் -பின் தான்
அறிந்தேன் எனைபிடித்த சனி நீயென்று
அதை எண்ணி எண்ணி தினம் ஞாயிறாய் எரிகிறேன் .

எழுதியவர் : கனகரத்தினம் (8-Nov-14, 8:54 am)
பார்வை : 271

மேலே