கல்லறைக் காதல்

என் கண்ணீர் துடைக்கவாவது
எனைத் தேடி வருவாய் என்ற‌
நம்பிக்கையில் தான் அழுது கொண்டிருக்கிறேன்..!
உன் கல்லறைக்கு முன்னால்...!

நீ விழி தேடிய பொழுதுகளில்
நான் பார்வையற்றிருந்தேன்,
உன் உயிர் பேசிய நாட்களெல்லாம்
நான் சடலமாயிருந்தேன்..!

உன் மீது மலர் மாலை விழுந்த போது தான்
என் காதல் மொட்டுக்கள் விரியக் கண்டேன்,
கடல் நீரே வற்றிய பின் தான்
என் தாகம் உணர்ந்து கொண்டேன்..!

நான் கொண்டு வந்த நட்சத்திரங்களை பதிப்பதற்கு
ஓர் வானம் இன்றித் தவிக்கிறேன்,
கழுத்தில் போட வேண்டிய மலர் மாலையை
உன் கல்லறைக்குச் சமர்ப்பிக்கிறேன்..!

இன்னும் எனைத் தேடி வருவாய் என்ற‌
நம்பிக்கையில் தான் அழுது கொண்டிருக்கிறேன்..!
உன் கல்லறைக்கு முன்னால்...!

எழுதியவர் : ஹனாப் (11-Nov-14, 11:40 am)
Tanglish : kallaraik kaadhal
பார்வை : 129

மேலே