ஏற்றுக்கொள்ளும்

நடக்காத
நடை வண்டி
கற்று தரும்
நடை பயில

கால் கடிக்கும்
செருப்புகூட
கைகொடுக்கும்
மானம் காக்க

தடுத்து காக்கும்
கரைகூட
வழி காட்டும்
ஆற்று நீருக்கு

அறிந்து கொள்ளும் மனம்
அனைத்தையும்
நல்லதாய்
ஏற்றுக் கொள்ளும்

எழுதியவர் : கோ.கணபதி (11-Nov-14, 11:42 am)
Tanglish : ERRukkollum
பார்வை : 105

மேலே