கனவுக்கவி

ஓர் நாள்
அவன் கைப்பிடித்து
தோள் சாய்ந்து...
பார்வைகளில்
ஆயிரம்
கதைப்பேசி......
என் யாசகனின்
புனிதமான
ஸ்பரிச தீண்டலோடு......
வானவில்லின்
வழியில்
நடந்து சென்றேன்....

பயணப்பாதையில்
பனிப்படர்ந்த
புற்தரை......
பூக்களை
முத்தமிடும்
ஆயிரம்
பட்டாம்பூச்சிகள்........
கீச்சிடும்
குருவிகள்
சத்தம்.......
தேகம்
தீண்டும்
தென்றல்.......

தூரத்தில்
ஓர் மரம்...
அம்மர நிழலில்....
அச்சுகமான
தருணத்தில்....
அவன் கை
என் தலை
கோத......
அவன் மார்பில்
முகம் புதைத்து
இயற்கை தாலாட்டில்...
இமை மூடி
எனை மறந்தேன்.....

இடையில்
யாரோ அழைப்பது போல்
ஓருணர்வு....
இடைஞ்சலின்
வெறுப்போடு
விழித்துப்பார்த்தேன்.....

என்னவென்று சொல்ல?
என் முன்னிருந்த
கண்ணாடி கூட
எனைப்பார்த்து சிரித்தது.....

என்ன நடந்தது....?

என்று
யோசித்தவாறு
என் அறை
மேஜையைப்பார்த்தேன்...
இக்கவிதையின்
முதல் வரியிலேயே
முற்றுப்புள்ளி
வைத்தவாறு
நான்........

கண்டது
கனவென்று
புரிந்தபோது
இதழோரத்தில்
சிறு புன்னகை
தவழ....
முற்றுப்புள்ளியை
காற்புள்ளியாக்கி
இக்கவியின்
மிகுதிப்பாதியை
தொடர்ந்தேன்.....!!!

எழுதியவர் : ம.கலையரசி (11-Nov-14, 12:10 pm)
பார்வை : 81

மேலே