நிலா என் அருகில்

நிலவில் கால்வைத்தேன்
கலங்கியது குட்டை.
@@@@@@@@@@@@@
நிலவை காட்டி சோறு ஊட்டியதாய்க்கு
நிலவிலிருந்து பூமியை காட்டுவேன்
வெகுவிரைவில்.
@@@@@@@@@@@@@
நிலவில் நீர் துளி
உன் கண்ணத்தின்
பிரதிபலிப்போ?
@@@@@@@@@@@@@
நிலவிலிருந்து
பார்வை ஏவுகணை
தாக்கப்பட்டது
நான்
வெளிப்பட்டது காதல்
துளிர்விட்டது கவிதை.
@@@@@@@@@@@@@

எழுதியவர் : R.ஸ்ரீனிவாசன் (11-Nov-14, 12:56 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 73

மேலே