கரைந்த விழிகள்
உன்னை காண நொடிகள் யாதும்
என் இமைகளின் ஓரம் ஈரப்பதம் ஆகும்
ஆழ்ந்து கிடக்கிறாய் ஆழமாய்
என் விழிகளுக்குளே
என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
உன் அடர்ந்த பிரிவாலே
தோய்ந்து போய் உள்ளது உள்ளம்
நீ நீண்ட துலைவிலே நிற்கிறாய்
அடியெடுத்து உன் அருகே வந்துக் கொண்டிருக்கிறேன்
ஏனோ நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய்
என் விழிகளுக்கு தென் படாமல்
ஓய்ந்து போனேன் தேடி தேடி
உடைந்து போனேன் உன்னை நாடி நாடி
விழுந்து போகிறேன் மண்ணில் ஓடி
கலங்கரை விளக்கமாக நான் மாறி
உன் நினைவின் பிம்பமானது என் ஈரமான விழிகள்
எழுத்து
ரவி சுரேந்திரன்