தூக்கணாங்குருவி
கட்டிலுக்கு கால்வலியாம்...
நீயும் நானும் படுத்ததிலே...!
கருத்த மச்சான் கனவுகண்டேன்...!
பருத்திவிதை வெடிக்கக்கண்டேன்..!
இப்போ...
நீயில்லாம படுத்ததிலே...
நெஞ்சுக்குள்ள..நெருஞ்சிமுள்ளே..!
புடிச்சுவந்த விட்டிலிடம்...
வெளிச்சமில்லை..என்ன சொல்ல..!
ஒத்தையில இருக்கேனே...
தூக்கணாங்குருவி நானே...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
