வறுமையின் புன்னகை
காற்றோடு கலந்தே எங்கும்
நிறைந்திருக்கும் எங்கள் கஷ்டம்
தரையோடு ஒட்டியே காத்திருக்கும் எங்கள் உணவும் உறக்கமும்
பல வீடுகளை காட்டினாலும் எங்கள் நிரந்தர வீடு ஏனோ வீதிதானே
பசிச்சாலும் படிப்பில்லாவிட்டாலும்
பணம் தேடி ஓட மாட்டோம்
பட்டினியை வயிற்றில் மறைத்துக் கொண்டு
உதட்டில் வறுமையை புன்னகையாகி
வாழ்கிறோம் ஒரு சாலை ஓரமாக.
எழுத்து
ரவி சுரேந்திரன்