rajeshkrishnan9791 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  rajeshkrishnan9791
இடம்:  New Delhi
பிறந்த தேதி :  27-Dec-1921
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Oct-2013
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  58

என்னைப் பற்றி...

இசை பிரியன் . நான் கிடார் வாசிப்பேன். பாடல் எழுதவும் ஆசை.

என் படைப்புகள்
rajeshkrishnan9791 செய்திகள்
rajeshkrishnan9791 - ஷிவானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2020 4:51 pm

அன்பை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .
அபாயத்தை வெளிப்படுத்தும் நிறம் சிகப்பு .

அன்றாடப் நாட்களில் நம் உடம்பில்
ஓடும் நிறம் சிகப்பு ,

மாலை நேரத்தில் சூரியனை வழி அனுப்பி
சந்திரனை கூப்பிடும் வானத்தின் நிறம் சிகப்பு,

ஆக்ரோஷம் வந்தால் கண்ணின் நிறம் சிகப்பு
ஆனந்தம் வந்தால் அனந்த கண் நீர் வரும் இடம் சிகப்பு

உணவு ருசிக்க அன்பை கொட்டி சமைக்கும் - சமையலின்
மிளகாய் பொடியின் நிறம் சிகப்பு

மேலும்

சிகப்பு சிறப்பு 18-Jan-2020 7:25 pm
rajeshkrishnan9791 - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2020 7:00 pm

அவன் கல்லறையில்
அவளோ கல் அறையில்

அவன் மண்மூடி உறங்கிக் கொண்டிருந்தான்
அவள் கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தாள்

அவன் சாம்பலாய் வாடிக் கொண்டிருந்தான்
அவளோ சாம்பலைத் தேடிக்கொண்டிருந்தாள்

அவனுக்குப் பாடை தயாரானது
அவளுக்கோ மேடை தயாரானது

அவன் மீதும்
சில மலர்கள் விழுந்தன
அவள் மீதும்
சில மலர்கள் விழுந்தன

அவளோ மண மேடையில்
அவனோ ... மேடையில்

ஊர்வலம்
இருவருக்கும் நடந்தது

நீர்த்துளிகள் இருவர் மீதும் விழுந்தன
அவள் மீது பன்னீர் துளிகள்
அவன்மீது கண்ணீர் துளிகள்

அவளுக்கு மகுடம் சூட்டப்பட்டது
அவனுக்கோ மண்குடம் உடைக்கப்பட்டது

அவள் வீட்டருகே ஓலைகள்
அவன் வீட்டருகே ஓலங்கள்

கரைய

மேலும்

உவமைகள் அழகோ அழகு... 12-Feb-2020 4:29 pm
ஆழமான காதல் 18-Jan-2020 7:22 pm
rajeshkrishnan9791 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2020 6:20 pm

புகை தரும் சுகமோ சில நொடிகள்
அதனால் கெடுமே உன் தினங்கள்
வேண்டாம் வேண்டாம் கொடும் புகையே
அது மனித உயிர்க்கு பெரும் பகையே
பொல்லாத கரும்புகை உள்ளே சென்றால் நோய்கள் குடி கொள்ளும்
உன் வாழ்வும் பறிபோகும், அந்தோ பரிதாபம்

பெண்ணிற்கு வேண்டும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு
அதை மறந்து புகைத்தால் நிற்கும் அவளின் உயிர் துடிப்பு
பள்ளி பருவத்திலே தீய பழக்கம் கொண்டாய்
உன் பருவ மயக்கத்திலே தீமை வழி சென்றாய்
புத்தகம் மட்டும் படித்தால் போதுமா
ஒழுக்கம், நேர்மை,உயர் பண்பும் கூட இங்கு வேண்டுமல்லவா

கவலை தீர எளிமையான புகையை நாடாதே
வரும் துயரை மறந்து உடலின் பெலனை தெருவில் போடாதே
உறவு என்பார் தோழமை என்பார் அருகில்

மேலும்

rajeshkrishnan9791 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 1:23 am

ஆவாரம் பூ கூட நஞ்சானதோ
நீ கூறும் வார்த்தைகள் பொய்யானதோ
என் காதல் ராஜா கண்ணீரில் ரோஜா
விண் மீது ஆகாயம் இரண்டானதோ

உனக்காக நான் எனை மாற்றினேன்
நாள் தோறும் கண்ணின் ஓளியென உனை ஏற்றினேன்
ஒரு மின்சாரம் உள் நெஞ்சில் பாயும்
இங்கு என் தேகம் செந்தீயில் வெகும்
எனக்காக உன் நெஞ்சில் காதல் அது ஏன் இல்லை
வெறும் பனிக்காற்று தீண்டும் மரமானேனோ

என் ஆசைகள் நீர்க் கோலங்கள்
அனல் மீது பனித்துளியென என் தாபங்கள்
இவள் கண்ணீரம் கடல் போல மாறும்
என்றும் என் ஜுவன் உனையே தேடும்
மாறாத எண்ணங்கள் தீராத துன்பங்கள்
உணர்வாலும் நினைவாலும் உனைத் தொடர்வேனே

மேலும்

rajeshkrishnan9791 - HSHameed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2019 11:06 am

பொய்யென்ற தீவில்
நான் பிறந்தேன்
மெய்யென்ற ஒன்றை
நான் இழந்தேன்-என்
பூக்கள் வாடிப் போக-உன்
நினைவில் நெஞ்சம் சாக...
சரியான தோல்வி காதல்
பிரயாணத் தேடல் காதல்...
உயிரே...
பன்னிரண்டு வயத்தினிலே
எந்நெஞ்சம் போனது..
சொந்தங்களும் இன்பங்களும்
நீயின்றி பொய்யானது...
காற்றில் ஆடும் பூக்களும்
காற்றில்லாமல் சாகுதே...
எந்தன் வாழ்விலே...
சோகம் கண்ணில் ஆடுதே
தேகம் கீழே வீழுதே
ஏனோ கண்மனி...
விண்வெளியும் புல்வெளியும்
என்முகத்தைப் பார்க்குது
வாடிநிற்கும் என்மனதில்
மருத்துவங்கள் கூறுது...
நிலவைப் போன்ற உன்னைநான்
கண்டு கிணற்றில் மூழ்கினேன்
மூச்சும் நின்றதே...
சேவலாக திரிந்தவன்
சாம்பலாக மாறினேன்
ஏனோ கண்மனி...

மேலும்

நன்றி... 24-Jun-2019 11:02 am
பொய் என்ற தீவு . அழகிய கற்பனை. கவிதை மிக அருமை . 24-Jun-2019 10:22 am
rajeshkrishnan9791 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2019 3:53 pm

உன் கண்கள் அது உறங்கவில்லை
உன் கால்கள் அவை ஓயவில்லை
பந்த பாசம் விட்டு நெஞ்சின் நேசம் கெட்டு உழைத்தாய் உழைத்தாய் தினம் பாடுபட்டு
தேசத்தின் காவலாய் மக்களின் தோழனாய் தமிழ் மண்ணின் வீரனாய் தர்மத்தின் தலைவனாய் என்றென்றும் இருப்பாய் உயர் புகழ் பெருவாய்
வாழ்க எம் காவலே வாழ்க எம் காவலே

பனியோ மழையோ வெயிலோ புயலோ நீ பொறுத்து கொண்டாய்
பணமோ பலமோ ரணமோ பகையோ நீ எதிர்த்து நின்றாய்
சட்டம் உண்மை அதை காத்திடவே உயிர் துச்சம் என நீ துணிந்தாய்
குற்றம் தனை கடிந்திடவே ஒரு சிங்கம் போலவே நீ எழுந்தாய்
வெல்லட்டும் உன் வீரமே
வெற்றிகள் இல்லை தூரமே

இரவோ பகலோ இருளோ ஒளியோ நீ விழித்து கொண்டாய்
களவோ கொலையோ அவலம் நிலையோ அதை ம

மேலும்

rajeshkrishnan9791 - rajeshkrishnan9791 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2018 3:33 pm

ஒரு பெண் ~

உன் தோள் அழகு உன் சிரிப்பழகு
நீ பேசும் போது உன் மொழி அழகு
தித்தித்தாய் தித்தித்தாய் உயிர் வரைத் தித்தித்தாய்
தீரனே வீரனே என்னை வெல்லும் சூரனே
துடித்தேன் தவித்தேன் உன்னை நானும் ரசித்தேன்
கண்ணாளா ...
விழுந்தேன் ...
கரைந்தேன் ...
என் காதல் சொல்ல விரைந்தேன்

உன் சேட்டை ஆடும் வேட்டை அது மலை கழுகு
தள்ளாமல் செல்லாமல் நீ வந்துப் பழகு
என் தேகம் மோகத் தழலில்
எந்நாளும் உந்தன் நிழலில்
வைத்தேனே உன்னை
என் நெஞ்சம் என்னும் சிறையில்
என் கனவும் வாழ்வும் நீயடா
நீ என்றும் என்னைத் தேடடா
ஒரு முத்தம் நன்றாய் போடடா
வந்து பித்தம் தீர ஆடடா

என் பெண்மை பஞ்சாகும் அதைக் கட்டித் தழுவு

மேலும்

rajeshkrishnan9791 - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
26-Sep-2018 6:02 pm

பொறுமை

மேலும்

rajeshkrishnan9791 - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 9:21 pm

வஞ்சனைக் கூட்டம் பெருகுது –அதன்
வன்முறை பரந்து விரியுது
கொஞ்சமோ தொல்லைகள் கொடுக்குது-தினம்
கொலைக்களம் காண துடிக்குது.

வாளைக் கையில் எடுக்குது –பலர்
வாழ்வை அதனால் முடிக்குது.
தேளாய் கொட்டி வதைக்குது –அதன்
கொடுமை நித்தமும் பெருகுது.

பாலியல் வன்முறை கூடுது-அதைப்
படித்திடும் நெஞ்சமோ பதறுது
வேலியே பயிரினை மேயுது –எனும்
வேதனை நெஞ்சினை அடைக்குது.

பணத்தைத் தேடி அலையுது –உயர்
பண்புகள் அதனால் தொலையுது
தணலைக் கொட்டி எரிக்குது-ஒரு
தறுதலை ஆகித் திரியுது.

விளையும் நிலத்தை பறிக்குது-அது
வீணாய் போயிட வைக்குது
களையென பொய்யரை வளர்க்குது-அதைக்
கண்டும் காணா திருக்குது.

நஞ்சினை மனதில்

மேலும்

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா ! 26-Sep-2018 7:26 pm
செம மாஸ் 25-Sep-2018 10:25 pm
rajeshkrishnan9791 - rajeshkrishnan9791 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2013 9:30 am

விழிகள் இரண்டில் கண்ணீர் தந்து
தூரம் சென்றாய் கிளியே
காதல் கொண்டேன் கண்ணீர் கொண்டேன்
உருகும் உயிரின் வலியே
நேசம் கொண்டேன் வேசம் என்றாய்
உதிரம் உரையும் கிளியே
நெஞ்சில் ஊனம் வலியில் நானும்
உடைந்தேன் உயிரின் வலியே

நீயில்லாதொரு உலகில் நானும்
இருளாய் மறைவேன் பெண்னே
வழிகள் தோறும் முள்விதைத்தென்னை
வதைத்தெடுத்தாயடி கண்னே
உயிரின் தேடல் இதழில் பாடல்
நீயென் காதல் ஒளியே
காதல் கொண்டு கைகள் இரண்டு
குவித்தேன் வருவாய் கிளியே

மாலை வருமோ கவலை தருமோ
உன்னைத் தேடும் கண்கள்
பாலை வனமோ வாழ்வின் கனமோ
கல்லரையாகும் கற்கள்
சேலை வருமோ சோலை தருமோ
உன்வாய் தந்திடும் சொற்கள்
காத

மேலும்

நன்றி 27-Oct-2013 7:00 am
காதல் வரிகள் அருமை..... 27-Oct-2013 12:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (81)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (81)

senthu

senthu

madurai
Balakumar.S

Balakumar.S

கோயம்புத்தூர் , தமிழ்நாடு,

இவரை பின்தொடர்பவர்கள் (81)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே