உன்னைத் தேடி

விழிகள் இரண்டில் கண்ணீர் தந்து
தூரம் சென்றாய் கிளியே
காதல் கொண்டேன் கண்ணீர் கொண்டேன்
உருகும் உயிரின் வலியே
நேசம் கொண்டேன் வேசம் என்றாய்
உதிரம் உரையும் கிளியே
நெஞ்சில் ஊனம் வலியில் நானும்
உடைந்தேன் உயிரின் வலியே

நீயில்லாதொரு உலகில் நானும்
இருளாய் மறைவேன் பெண்னே
வழிகள் தோறும் முள்விதைத்தென்னை
வதைத்தெடுத்தாயடி கண்னே
உயிரின் தேடல் இதழில் பாடல்
நீயென் காதல் ஒளியே
காதல் கொண்டு கைகள் இரண்டு
குவித்தேன் வருவாய் கிளியே

மாலை வருமோ கவலை தருமோ
உன்னைத் தேடும் கண்கள்
பாலை வனமோ வாழ்வின் கனமோ
கல்லரையாகும் கற்கள்
சேலை வருமோ சோலை தருமோ
உன்வாய் தந்திடும் சொற்கள்
காதல் கொண்டு கைகள் இரண்டு
குவித்தேன் தருவாய் இதழ்கள்

சுட்டாய் என்னை விட்டாய் என்னை
பட்டாய் விழுந்தேன் நெருப்பில்
மிட்டாய் மகளே தொட்டாய் துகளே
என்றும் என்னுயிர் துடிப்பில்
கட்டாய் இருந்தேன் நட்டாய் விழுந்தேன்
செல்லாய் எங்கோ மிதப்பில்
காதல் கொண்டு கைகள் இரண்டு
குவித்தேன் வருவாய் அருகில்

மௌனம் மொழியாய் நீயே கதியாய்
தொடர்வேன் காலடி நிழலாய்
ராகம் தொலைத்தேன் பாடல் மறந்தேன்
வந்தது வலிகள் தமிழாய்
நெஞ்சின் உரமாய் காதல் சுகமாய்
வருவாய் உயிரின் உயிராய்
காதல் கொண்டு கைகள் இரண்டு
குவித்தேன் வருவாய் கதிராய்

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (26-Oct-13, 9:30 am)
Tanglish : unnaith thedi
பார்வை : 85

மேலே