நத்தை
நத்தை
ஊர்ந்து நான் சென்றாலும்
சோர்ந்து விடமாட்டேன்
அடைந்திடுவேன்
என் இலக்கை ஒரு நேரம்
அவரவர் பாரம் அவரவர் மீதாயின்
என் பாரம் என்மீதோ
நம் பாரம் மண் மீதே !
நத்தையை எடுத்து
மெத்தையில் இட்டவர்
எத்தனை பேரென
அறியேன் நான்
மெத்தையில் இட்ட
நத்தை அதுவோ
பொத்தென வீழ்ந்தது
சொத்தையை தேடி
யார்யார் எங்கே
இருப்பது என்று
முடிவு செய்தவன்
முக்கண் கொண்ட
சொக்கன் ஆவான்