வறியவன் கேட்ட வரம்
கரிமுகம் முன்னின்று
சிரமது தாழ்த்தி
வறியவ நானொரு
வரம் கேட்டேன்
உழைகின்ற நாட்களில்
ஊதியமோ போதவில்லை
நஞ்சில்லா நெஞ்சமிது
அஞ்சுவதேன் ஐங்கரனே
பூட்டிவைத்த நெஞ்சினிலே
ஆட்டி வைக்கும் ஐயமிது
கட்டிவைக்க பொக்கிஷத்தை
காட்டிவைக்கும் நேரமெது
போதனை யார் செய்தார்
சோதனை ஏன் செய்தாய்
வேதனை தீர்வதற்கு
வேறொரு வழி உண்டோ ?