வெங்காயம்
வெங்காயம்
நறுக்கும்போது மட்டுமே
கண்ணீர் விட வைத்தது
விலையைக் கேட்டாலே
கண்ணீர் விட வைக்கிறது!!!
வெங்காயம்
புது மாப்பிள்ளை
சீதனமாய் கேட்கிறான்
ஒரு மூட்டை
மணப்பெண் தந்தை கலக்கத்தில்!!!
"வெங்காயம்"
யாரும் இப்படி
எவரையும் திட்டாதீர்கள்
அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது!!!
வெங்காயம்
உணவகங்களில் உண்பவர்கள்
உணவினில்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
காணவில்லையென்று!!!
வெங்காயம்
ஏழையின் இல்லத்தில்
இருக்க பிடிக்கவில்லையாம்
வசதி படைத்தோர்
இல்லங்களிலோ இறுமாப்பாய்!!!