புகையிலை ஒழிப்பு
புகை தரும் சுகமோ சில நொடிகள்
அதனால் கெடுமே உன் தினங்கள்
வேண்டாம் வேண்டாம் கொடும் புகையே
அது மனித உயிர்க்கு பெரும் பகையே
பொல்லாத கரும்புகை உள்ளே சென்றால் நோய்கள் குடி கொள்ளும்
உன் வாழ்வும் பறிபோகும், அந்தோ பரிதாபம்
பெண்ணிற்கு வேண்டும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு
அதை மறந்து புகைத்தால் நிற்கும் அவளின் உயிர் துடிப்பு
பள்ளி பருவத்திலே தீய பழக்கம் கொண்டாய்
உன் பருவ மயக்கத்திலே தீமை வழி சென்றாய்
புத்தகம் மட்டும் படித்தால் போதுமா
ஒழுக்கம், நேர்மை,உயர் பண்பும் கூட இங்கு வேண்டுமல்லவா
கவலை தீர எளிமையான புகையை நாடாதே
வரும் துயரை மறந்து உடலின் பெலனை தெருவில் போடாதே
உறவு என்பார் தோழமை என்பார் அருகில் சேர்க்காதே
அவர் புகைக்கும் போது தள்ளி சென்று நிறுத்த சொல்வாயே
நல் உயிரைக் காப்பாயே
பொல்லாத புகையிலை கொள்ளாதே
அதை ஒழிக்கும் கொள்கையை கொள்வாயே
நோயில்லா வாழ்வை பெற்றிட நாளும் உறுதி செய்வாயே