தமிழக காவல் துறை பற்றிய கவிதை

உன் கண்கள் அது உறங்கவில்லை
உன் கால்கள் அவை ஓயவில்லை
பந்த பாசம் விட்டு நெஞ்சின் நேசம் கெட்டு உழைத்தாய் உழைத்தாய் தினம் பாடுபட்டு
தேசத்தின் காவலாய் மக்களின் தோழனாய் தமிழ் மண்ணின் வீரனாய் தர்மத்தின் தலைவனாய் என்றென்றும் இருப்பாய் உயர் புகழ் பெருவாய்
வாழ்க எம் காவலே வாழ்க எம் காவலே

பனியோ மழையோ வெயிலோ புயலோ நீ பொறுத்து கொண்டாய்
பணமோ பலமோ ரணமோ பகையோ நீ எதிர்த்து நின்றாய்
சட்டம் உண்மை அதை காத்திடவே உயிர் துச்சம் என நீ துணிந்தாய்
குற்றம் தனை கடிந்திடவே ஒரு சிங்கம் போலவே நீ எழுந்தாய்
வெல்லட்டும் உன் வீரமே
வெற்றிகள் இல்லை தூரமே

இரவோ பகலோ இருளோ ஒளியோ நீ விழித்து கொண்டாய்
களவோ கொலையோ அவலம் நிலையோ அதை முறித்து வென்றாய்
பெண்னின் மானம் தனை காத்திடவே ஒரு வில்லின் அம்பு என நீ விரைந்தாய்
ஏழை மக்கள் சேவகனாய் உற்ற நண்பன் போலவே நீ நடந்தாய்
சிந்தும் உன் இரத்தமே
இது முடிவில்லா தர்ம யுத்தமே

எழுதியவர் : ராஜேஷ் (29-Jan-19, 3:53 pm)
சேர்த்தது : rajeshkrishnan9791
பார்வை : 355

மேலே