ஒரு பெண்ணின் காதல் தோல்வி

ஆவாரம் பூ கூட நஞ்சானதோ
நீ கூறும் வார்த்தைகள் பொய்யானதோ
என் காதல் ராஜா கண்ணீரில் ரோஜா
விண் மீது ஆகாயம் இரண்டானதோ

உனக்காக நான் எனை மாற்றினேன்
நாள் தோறும் கண்ணின் ஓளியென உனை ஏற்றினேன்
ஒரு மின்சாரம் உள் நெஞ்சில் பாயும்
இங்கு என் தேகம் செந்தீயில் வெகும்
எனக்காக உன் நெஞ்சில் காதல் அது ஏன் இல்லை
வெறும் பனிக்காற்று தீண்டும் மரமானேனோ

என் ஆசைகள் நீர்க் கோலங்கள்
அனல் மீது பனித்துளியென என் தாபங்கள்
இவள் கண்ணீரம் கடல் போல மாறும்
என்றும் என் ஜுவன் உனையே தேடும்
மாறாத எண்ணங்கள் தீராத துன்பங்கள்
உணர்வாலும் நினைவாலும் உனைத் தொடர்வேனே

எழுதியவர் : ராஜேஷ் (25-Jun-19, 1:23 am)
சேர்த்தது : rajeshkrishnan9791
பார்வை : 810

மேலே