நொடிப்பொழுது மரணம்

சற்றேக்குறைய உன்னைப் போலவே
தொியும் அந்த நீலச் சட்டைக்காரனை
சற்று நெருங்கி மூச்சடைத்து பாா்க்கிறேன்
மனைவியின் கைப்பிடித்து
இடைவெளி ஏதும் விடாமல் கூட்டிப்போகிறான்
உன்னைப்போலவே அவனும்
காக்க வைத்த காதலியை
கட்டிக்கொள்ள காலம் வருமென்று
பணக்கோட்டால் அளவெடுத்து
நிறத்தோலை துகிலுாித்து
பிணமாய் நீ வீசி சென்றது போல்
அவனுக்கும் யாரோ இருந்திருக்கலாம்
அளவில்லா காதலுடன்.

-------- சங்காி அழகா் --------

எழுதியவர் : சங்காி அழகா் (22-Jun-19, 1:51 pm)
சேர்த்தது : சங்கரி அழகா்
பார்வை : 454

மேலே