பள்ளிப் பருவமுதல் உன்னை
பள்ளிப் பருவமுதல் உன்னைப்
பாசத்தோடு பார்த்து வந்தேன்
எள்ளும் புன்னகையால் என்னை - நீ
ஏளனம் செய்து சிரித்து வைத்தாய்
என்னில் ஒரு மாற்றம் உன்னாலே ஆனதடி
எடுத்து சொல்லிவிட என் மனம் பயந்ததடி
அத்தி பூத்ததற் போல் அகன்றதடி
என் உள்ளத்து பயம்
ஆசையாய் ஓடி வந்து - என்
ஆசையை நான் சொன்னேனடி
ஆழமான வார்த்தையாலே அழகாக
எடுத்து சொல்லி அதை நீ நிராகரித்தாய்
உள்ளங்கொல்லுஞ் சொல்லெடுத்து - உன்னிடம்
மன வேதனையைச் சொல்லி வைத்தேன்
ஒரு போதும் நீ அசையவில்லை - உன்
மனமோ எவற்றாலும் நெகிழவில்லை
- - - நன்னாடன்.