அழகு

ஒரு பெண் ~

உன் தோள் அழகு உன் சிரிப்பழகு
நீ பேசும் போது உன் மொழி அழகு
தித்தித்தாய் தித்தித்தாய் உயிர் வரைத் தித்தித்தாய்
தீரனே வீரனே என்னை வெல்லும் சூரனே
துடித்தேன் தவித்தேன் உன்னை நானும் ரசித்தேன்
கண்ணாளா ...
விழுந்தேன் ...
கரைந்தேன் ...
என் காதல் சொல்ல விரைந்தேன்

உன் சேட்டை ஆடும் வேட்டை அது மலை கழுகு
தள்ளாமல் செல்லாமல் நீ வந்துப் பழகு
என் தேகம் மோகத் தழலில்
எந்நாளும் உந்தன் நிழலில்
வைத்தேனே உன்னை
என் நெஞ்சம் என்னும் சிறையில்
என் கனவும் வாழ்வும் நீயடா
நீ என்றும் என்னைத் தேடடா
ஒரு முத்தம் நன்றாய் போடடா
வந்து பித்தம் தீர ஆடடா

என் பெண்மை பஞ்சாகும் அதைக் கட்டித் தழுவு
இன்பங்கள் உண்டாகும் இவள் கண்ணம் மெழுகு
இவள் கைகள் போடும் கோலம்
அதில் எங்கும் உந்தன் ஜாலம்
கொள்வேனே உன்னை என் ஜீவன் உள்ள காலம்
என் தாளம் ராகம் நீயடா
வந்து காதல் கீதம் பாடடா
ஒரு மீன் சேரும் நீரடா
நீ என்னில் வந்து மூழ்கடா

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (25-Sep-18, 3:33 pm)
சேர்த்தது : rajeshkrishnan9791
Tanglish : alagu
பார்வை : 492

மேலே