கல்லறையில் காதலன்

அவன் கல்லறையில்
அவளோ கல் அறையில்

அவன் மண்மூடி உறங்கிக் கொண்டிருந்தான்
அவள் கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தாள்

அவன் சாம்பலாய் வாடிக் கொண்டிருந்தான்
அவளோ சாம்பலைத் தேடிக்கொண்டிருந்தாள்

அவனுக்குப் பாடை தயாரானது
அவளுக்கோ மேடை தயாரானது

அவன் மீதும்
சில மலர்கள் விழுந்தன
அவள் மீதும்
சில மலர்கள் விழுந்தன

அவளோ மண மேடையில்
அவனோ ... மேடையில்

ஊர்வலம்
இருவருக்கும் நடந்தது

நீர்த்துளிகள் இருவர் மீதும் விழுந்தன
அவள் மீது பன்னீர் துளிகள்
அவன்மீது கண்ணீர் துளிகள்

அவளுக்கு மகுடம் சூட்டப்பட்டது
அவனுக்கோ மண்குடம் உடைக்கப்பட்டது

அவள் வீட்டருகே ஓலைகள்
அவன் வீட்டருகே ஓலங்கள்

கரையான்கலோடு அவன்
கடற்கரை
ஆண்களோடு அவள்

யாரும் ரசிக்கவில்லை
அவனை உண்டு
கல்லறையில் வளர்ந்த புல்லை
அனைவரும் ரசித்தனர்
அவள் கருவறையில்
வளர்ந்தது பிள்ளை

தலையில் அரும்புகலோடு அவள்
தலை எலும்புகளோடு அவன்

அவன் கல்லறையில்
இருந்த வாசகம்

அன்பே உன் அடக்கம்
என்னை அடக்கம் செய்தது

எழுதியவர் : குமார் (18-Jan-20, 7:00 pm)
பார்வை : 54

மேலே