மரணத்தை வெல்லும் அமுதாய்நின்றாய்

நீலத்தில் விழிகள் கொண்டாய்
நெஞ்சத்தில் காதல் கொண்டாய்
மௌனத்தில் புன்னகை செய்தாய்
மரணத்தை வெல்லும் அமுதாய்நின்றாய் !

அந்தியின் மஞ்சள் ஆனாய்
ஆகாயத்தின் வெண்ணிலா ஆனாய்
பிந்திவந்து அந்திக்கும் விடைகொடுத்தாய்
சந்தியாநிலவாய் என்னுடன் நடந்தாய் !

மெல்லஸ்பரிசிக்கும் தென்றலில் சிலிர்த்தாய்
மெல்லமலரும் பூக்களுடன் புன்னகையில்உரையாடினாய்
மெல்லத்திறக்கும் மனவாசலில் தேவதையாய்வரவேற்றாய்
மெல்லநுழைந்த என்னைஅணைத்து உள்ளே அழைத்துச் சென்றாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-20, 6:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே