அவள் அழகு

விரிகமலம் கண்டேன் அவள் முகமானதது
அல்லிக்கொடி கண்டேன் அவள் இடையானதது
பவளம் கண்டேன் அவள் அதரங்களானதது
முத்துக்கள் கண்டேன் அவள் பற்களானதே அவை
அன்னம் கண்டேன் அவள் நடை தந்ததது அது
நீல மயில் கண்டேன் அவள் துள்ளல் கண்டேனதில்
கூவும் குயில் இசைக்கேட்டேன் அவள் மொழியாய் அதில்
காணும் அத்தனையும் அவள் எழிலாய்க்கண்டேன்
இயற்கையின் அற்புதப் படைப்பாய் அவளை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jan-20, 4:39 pm)
Tanglish : aval alagu
பார்வை : 355

மேலே