அத்தை மகள் செவத்தப்புள்ள

சேற்றினிலே நாற்று நடும் குயிலம்மா
எந்தன் அத்தை மகள் செவத்தப்புள்ளே
கழிசடைக் காற்றை அடித்து விரட்டு
அருகில் வந்து உன்னழகில் மதிமயங்கி
துகில் விலக்கி அகம் ரசிக்கப் பார்க்குதடி
கண்டதும் மனமிங்கே ஆசையில் துடிக்குதடி
உச்சி வெயில் சூடும் ஏனோ அடிக்குதடி
உன்னுடலும் அதனால் வேர்த்து நனையுதடி
எங்குமே அழகு விளைந்தே கிடக்கும் அழகியே
வெந்த புண்ணில் இங்கு வேல் வந்து பாயுதடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (18-Jan-20, 12:46 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 94

மேலே