நட்பென்பது

நான் தேடாத துணை
என்னை தேடி தொடர்ந்தது !

நான் வாடி போன நாட்களிலும்
என்னை தேடி அணைத்து ஆறுதல் சொன்னது !

துன்பங்களிலும் இன்பங்களிலும் எனக்கு சரிசமமாக நின்றது !

நான் தூங்காத இரவுகளிலும்
தன் துக்கத்தை மறந்து உரையாடியது !

நான் இறந்து போனாலும் என் உடலை தூங்கி சுமந்து அடக்கம் செய்து என் மணல் மேல் பல கண்ணீர் மலர்களை துவிட்டு துவண்டு செல்லும்!

இறுதிவரையான பயணம் நட்பு.

எழுத்து
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (23-Aug-19, 9:04 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 859

மேலே