பால்ய சிநேகம்

நெடுஞ்சாலை...
சுடும் வெயில் நேரம்!
சயிரன் வண்டியில் நான்!
ஓரத்தில் மிதிவண்டி
மூன்று பேர் முந்தும் காட்சி!
சயிரன் வண்டி சைக்கிளானது!
பாழும் மனது பால்யம் போனது!
வீரன் கோயில் ஆலமரம்!
கம்மாக்கரை புளியம்பழம்!
தூண்டில் மீன் பிடிக்கும் குளம்!
திருடித் திண்ண கரும்பு சோளம்!
எல்லாம் கண் முன் வந்தது!
நீரும் நினைவும் ஓன்றாய் சுர்ந்தது!
என் சிநேகம்....
அவனின்றி போனதில்லை என் நாட்கள்!
டயர் வண்டி மீதேறி
வயல் காடு சுற்றினோம்!
நுங்கு வண்டி ஓட்டிக்கிட்டு
தெருவெல்லாம்திரிந்தோம்!
மழைக்கால ஓடைகளில்
மனதோடு மிதந்தோம்...
சிறு காகித ஓடங்களில்....
செல் இல்லை!அழைப்பில்லை!
விளையாட வர
நேரம் தவறவில்லை!
என் கால்கள் சிராய்ப்புக்கு
மண் கொண்டு முதலுதவி
செய்த மருத்துவன்!
வாடகை சைக்கிள் எடுத்து
ஓட்டக் கற்றுத் தந்த
பயிற்றுவன்!
அவன் இன்றி
முழுமையில்லை என் பால்யம்!
என் பால்ய சிநேகம் அவன்!
எங்கு இருக்கிறானே?
கையோடு வைத்துள்ளேன்!
அவன் விரும்பும்
கடலைமிட்டாய்!
பார்த்தவுடன் கொடுப்பதற்கு...
தேடாமல் வந்த சிநேகம்!
இன்று
தேடியும் கிடைக்கவில்ல!
என் பால்ய சிநேகம்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:32 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : paalya snegam
பார்வை : 342

மேலே