விரதராஜன்

சோதிடர்:
தம்பி உங்க பரம்பரைக்கே சோசியம் பாக்கறது எங்க குடும்பம். உன்னோட கொள்ளுத் தாத்தாவை நான் சின்ன வயிசிலே பாத்திருக்கிறேன்.‌ உன் தாத்தா பேரு வரதராஜன்.‌அவரோட கொள்ளுப் பேரனுக்கு அவரு பேரையே வைக்கணும்னு சொன்னாரு. உங்க அப்பனுக்கும் அது தெரியும். நீ இப்ப எங்கிட்டே வந்திருக்கிற. நல்ல செய்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.
@@@@@@@
ஆமாங்க சோசியர் ஐயா. என்‌ மனைவிக்கு இன்னிக்கு விடியல் காலை குழந்தை பிறந்திருக்கு.
@@@@@
சந்தோசம் தம்பி. உந் தாத்தா 'வரதராஜன்' ஐயா பேரை வச்சிடலாம்.
@@@##
நல்லதுங்க‌ ஐயா.‌ ஆனால் பிறந்தது இரட்டை ஆண் குழந்தைகள். ஒரு பையன் 'வரதராஜன்'. இன்னொரு பையனுக்கு?
@@#####
அது ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. உங்க தாத்தாவோட பேருள இருக்கிற‌ முதல் எழுத்தை மாத்தி வேற எழுத்தைப் போட்ட அருமையான பேரு கிடைக்குது. இங்கே நீ சொல்லு பாக்கலாம்.
@@@@@#
எனக்கு ஒண்ணும் புரியலீங்களே.
@@@####
தாத்தா பேரு வரதராஜன். இந்தப் பேரில் உள்ள 'வ'வை எடுத்துவிட்டு 'வி' போடு.
@@@@@#
விரதராஜன். அருமை. அருமை ஐயா. வரதராஜன் - விரதராஜன்.‌ இரண்டு பேருக்கும் ஒண்ணுக்கொண்ணு தொடர்புடைய‌ பெயர்கள்.‌ ரொம்ப நன்றி ஐயா.

எழுதியவர் : மலர் (1-Mar-24, 9:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 84

மேலே