நெசவு

டேய் முத்தையா. உன் பையனுக்குப் பேரு வச்சிட்டயா? பொறந்து ஒரு வாரம் ஆகுது. என்னடா ஆச்சு?

@@@@@

கண்ணுச்சாமி, இந்தக் காலத்தில பட்டி தொட்டியெல்லாம் பொறக்கிற குழந்தைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள யாருமே வைக்கிறதில்லை, நான் பட்டணத்து சோசியரைப் பையனுக்கு சாதகக் குறிப்பு எழுதி ஒரு இந்திப் பேரை வைக்கச் சொன்னேன். 'கேசவு'ங்கிற பேரை வைக்கச் சொல்லிச் சொன்னாரு. அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன். "அது சாமி பேரு. அர்த்தம் தெரிஞ்சு என்ன செய்யப் போற?" சொல்லிட்டாரு. எந்த அர்த்தமா இருந்தா நமக்கென்ன? பையன் பேரு இந்திப் பேரா இருக்கணும். அதுதான் நம்ம தமிழ்க் கலாச்சாரம். சரி நேத்துப் பொறந்த உம் பையனுக்கு என்ன பேரு வைக்கிறதுன்னு நீயும் உன் மனைவியும் முடிவு பண்ணீட்டங்களா?
@@@@@@@@@
முத்தையா, நீயும் அஞ்சாம் வகுப்புப் படிச்சவன். என் படிப்பும் அவ்வளவுதான். உனக்குத் தமிழ்ப் பற்றோ, தமிழ் உணர்வோ இல்ல. நான் கொஞ்சம் வித்தியாசமானவன். நம்ம ஊரில எல்லாரும் சுற்றுச் சூழலுக்குக் கேடு செய்யும் பட்டாசு வகைகளை வெடிச்சு வீட்டு விலங்குகள், நிறைமாதமாக இருக்கிற இளம் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், இதய்நோயாளிகள், முதியோர்கள், பறவைகள், எல்லா உயிரனங்களுக்கும் அச்சுறுத்தலையும் அதொர்ச்சியையும் செய்யறாங்க.
அதில நீயும் ஒருத்தன். எங்க குடும்பத்தில் யாரும் அதைச் செய்வதில்லை, அதே மாதிரி நாங்க முருகரையும் எங்க குலதெய்வத்தை மட்டுமே கும்பிடுவோம்.
நாங்க தைத்திருநாள் தவிர வேற எந்தப் பண்டிகையும் கொண்டாடறதில்லை. எங்களைக் காப்பாத்தறது வேளாண்மையும் நெசவுத் தொழிலும் தான். இந்திக்காரங்க குழந்தைகளுக்கு 'மரம்'னுகூடப் பேரு வைக்கிறாங்களாம். அதனால நாங்க எங்க பையனுக்கு 'நெசவு'னு பேரு வைக்க முடிவு பண்ணீட்டோம். செய்யும் தொழிலே தெய்வம்.
@@@@@@@@@@@@@@
நம்ம ஊரு மக்கள் தொகை ஆயிரம் இருக்கும் நீ ஒருத்தன் தாண்டா நம்ம ஊரில தமிழ்ப் பற்று உள்ளவனா இருக்கிற. சரி. அது உன் விருப்பம். நானெல்லாம் ஊரோட ஒத்துப் போறவண்டா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Keshav = Lord Vishnu, Lord Krishna.
Piya = Tree

எழுதியவர் : மலர் (1-Mar-24, 2:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே