நரகநாதன்

என்னங்க பையனுக்கு 'நரகநாதன்'னு தான் பேரு வைப்பேனு அடம் பிடிக்கறீங்க?
@@@@@@
அடியே காமாட்சி எங்க அப்பா கனவிலே கடவுள் தோன்றி அவருக்கு எச்சரிக்கை கொடுத்தாராம்: "டேய் நாகநாதா, நீ செஞ்ச அக்கிரமம் அநியாயங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் நீ நரகத்தில் இருப்பது உறுதி"னு சொன்னாராம்.
"சாமி இதுக்கு பரிகாரமே கிடையாதா? இருந்தா சொல்லுங்க சாமி. அதை நான் நிறைவேத்தறேன்".
"நிறைமாதமாக உள்ள உன் மருமகளுக்கு இன்னும் பத்து நாள்ல ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கு 'நரகநாதன்'னு பேரு வைக்கணும். இல்லைனா அடுத்த பத்தாவது நாள் உன்னை நரகத்திற்கு அழைத்துகக் கொள்வேன். சம்மதமா"?
"ஐயோ சாமி. வேண்டாம். எனக்கு ஐம்பது வயது தான் ஆகிறது. என் பேரனுக்கு திருமணம் ஆகும் வரை நான் வாழணும் ஆசைப்பட்டேன்".
"உன் ஆசை நிறைவேறுனுமா? அதுக்கு என்ன செய்யனும்?"
"என் பேரன் பேரு 'நரகநாதன்'.
"சொன்ன சொல்லைக் காப்பாத்து"னு சொல்லிட்டு கடவுள் போய்விட்டாராம்.
இப்பச் சொல்லு காமாட்சி எங்க அப்பா இன்னும் பத்து நாள்ல இறக்கணுமா?

ஐயோ வேண்டாங்க. பையனுக்கு கடவுள் சொன்ன பேரையே வச்சிடுங்க. தாத்தா செய்த பாவம் பேரன் தலைல விடியுது.

எழுதியவர் : மலர் (7-Mar-24, 10:54 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 68

மேலே