வெள்ளம் காண்பித்த உள்ளங்கள்

மிதக்கும் சென்னை - வெள்ளம் காண்பித்த உள்ளங்கள் ----!!

உன்னையும்
என்னையும்
உடன்பிறப்பாக
எண்ண வைத்த தருணங்கள்
இவை.....!!

வெள்ளம் வந்துதான்
சில
உள்ளங்களை
உனக்கும்
எனக்கும்
காண்பித்து
போனது.......!!

வருஷா வருஷம்
பருவமழை
வருவது...... இயல்பு
அதுபோல
அரசியல்
வாய்கள்
வாய்க்கால் சரி.....வாய்த்தவர்கள்
சரியில்லை
என்று
வாதாடிப்
போனது......!!

அரச
இயந்திரம்
முடங்கியே
போனது...... உதவும்
கரங்களாய்
மனிதாபிமானம்
தடைகளை
வென்றது......!!

தனது
பாதையை
பணமாக்கிய
ஆட்சியாளர்களின்
காலத்தில்
முதலையும்
பாம்பும்
என்
வீடு தேடிவருவது
தவறில்லையே......!!

கோடி
கொடுத்து
மாடி
வாங்கி......மகிழ்ந்த
நான்
ஏரியின் கோபம்
கண்டு.....ஏங்கித்தான்
நின்றேன் இன்று
புரிந்தது அன்று
ஏன்
புரியவில்லை
என்று.....!!

கோடி கோடியாய்
ஒதுக்கியதெல்லாம்
ஒதுங்கியே
போனது......ஒப்புக்கு
அழுவது
போல ...... ஒரு
அண்டா அவியலோடு
அரசியல்
வென்று போனது......!!

ஒரு
குழந்தை கூட
தனது
சிறு உண்டியல்
சேமிப்பை
உத முன்வரும்போது
கோடிகளை சுருட்டிய
வெள்ளை உடுப்பு
கறுப்பாடுகளுக்கு
மட்டும்
ஏன்.... புலப்படவில்லை
எங்கள் அவலம்?

தண்டமாய்
ஆயிரம்
செலவு செய்யும்
அரசுகள்.....வெள்ள
நீரில்
தாண்டபோது...... தீண்டாமை
அரசுபோல
என்
வீதிக்கே வராத
உங்களை எங்கே
கொண்டுபோய்
விளக்கமறியலில்
வைப்பேன்?
தேடிய
விளக்குமாறும்
தெருவெள்ளத்தில்
தொலைந்தே
போனது...... உங்களைப்போல......!!

இனி வரும்
நாட்களில்
நிவாரண
அறிவிப்புக்கள்
சூரிய
திரையில்
வீரம் காட்டும்.....ஆனாலும்
ஆறாயிரம்
வந்தாலும்
ஆறாது
நம்
காயங்கள்......!!

அடுத்தவன்
செய்த
தவறையே
எடுத்து சொல்லிக்கொள்ளும்
அரசுகள்
தான்
என்ன
ஒரு நன்மை
செய்தேன்
என்று
ஒரு வரிகூட
சொல்வதே
இல்லை.....செய்தால்
தானே
என்று
சொல்லாமலே
சென்று
விடுகிறார்கள்......!!

ஓட்டுக்கு
துட்டு
வாங்கும்.....
எல்லோரும்
அரசை
திட்டுவதை
நான் ஏற்கமாட்டேன்...... நீங்கள்
செய்த
ஆரம்பத் தவறுதான்
நிகழ்கால
தவறின் குழந்தை.....!!

இனியாவது
இதையாவது
செய்வதை
நிறுத்துங்கள்.......வெள்ளம்
போகும் இடம்
போய்ச்சேரும்
எவரின்
கோபங்களும்
ஆளாகாமல்......!!!

நன்றி

தம்பு - உங்கள் உறவாக

எழுதியவர் : தம்பு (11-Dec-23, 3:16 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 65

மேலே