Nazeem - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nazeem |
இடம் | : |
பிறந்த தேதி | : 27-Dec-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 4 |
ஆத்தங்கர ஓரத்துல...
அந்தி சாயும் நேரத்துல...
தண்ணியள்ள போரவளே...
உன் கண்ணிரண்ட தாடி புள்ள...
அந்த கொடத்துக்கு குடுத்த இடமத...
என் வெரலுக்கும் குடுடி தடவிட...
உன் விழியது பொழியிற காதல...
உன் ஒதட்டுல ஏன் இன்னும் காணல...
உன் முடியில சொருவுன மல்லிக...
இந்த பொடியன இழுக்குது வள்ளியே..
உன் நெனப்புல வாழுறன் கள்ளியே...
பயத்துல இருக்கன் தள்ளியே...
உன் நடையில வளையுற இடையில...
நான் ஒடஞ்சுதான் விழுந்துட்டன் வலையில...
நீ சிரிச்சதும் பொடியன்ட மனசுல...
ஒரு காத்துத்தான் வீசுது தினுசுல...
வேர்த்தொழுகும் தருணத்தில் தாலாட்டும் தென்றல் அவள்...
பூத்திருக்கும் புஷ்ப்பங்களில் மனம் கவரும் வண்ணம் அவள்...
நடுநிசி சொப்பனத்தில் அவளோடு நான் சென்ற நெடுஞ்சாலை பயணமது விலகாமல் நிற்கின்றது விழி இரண்டும் திறந்த பின்னும்...
கனவுகளை கலைத்து விட்டு நிஜ வாழ்வில் நீச்சலடிக்க ஆசைதான்..
இருந்தாலும் உள்ளமது உலருவதை மங்கையவள் மறுத்து விட்டால்...
என்மனதிடம் என்ன சொல்லி புரிய வைப்பேன்...!???
பத்து மாசம் வயித்துலயும் பல வருசம் லயத்துலயும் பாத்து பாத்து வளத்த என் ஆத்தா...
என் வாழ்க்கை நெனச்சி அழையுதய்யா ஊர் காத்தா...
நாவறிஞ்சி தப்பொன்னும் நான் செய்யல...
இந்த பூ பரிக்க ஒரு வண்டும் ஏன் வரல...
கருவாகி போகாம சருகாகி போனாலும் சந்தோசம்...
கன்னி கலியாம காலம் போனது என் தோசம்...
கலியாணம் கட்டுற தகுதி என்னக்கில்லையோ...
இந்த ஒலகத்து ஆம்புலக்கி நான் மணக்கலையோ...
மோகத்த தீக்கனும்னு கேக்கலங்க...
என் சோகத்த ஊர் உலகம் பாக்கலிங்க...
நாக்குக்கு நரம்பில்ல நலியும் பக்கம் பேச்சு...
என் வாழ்க்கைக்கும் வரம்பில்ல தெச மாரி போச்சு....
#முதிர்_கன்னியா மூலையில கெடக்குறனே ஓரமா...
இனி எதுக்க
அந்த காதல் ஓவியத்தை சித்தரித்ததும் நானே....
கத்தரிப்பதும் நானே...
அவளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
#ஒரு_தலைக்_காதலன்...