மருத்துவப் பொது நுழைவுத் தேர்விற்கான மக்களாட்சி தமிழக மாணவர்களுக்கு செய்யும் வஞ்சனை...

மேகந்தழுவி மோகந்தனியா வன்புயலில் சிக்கியதொரு குயில்கூட்டம்
தாகந்தனிக்க தேகம்சுருங்கி தென்திசை நோக்கியபடி நடமாட்டம்...

கோவென ஏலமிட பறைகொட்டிட தேர்வருமே சேனைப்படை
கூவென ஓலமிட குறைகேட்க யார்வருவர் ஏனையவர்கள்...

கூறல்மொழிக் கூற்றுப்படி ஊற்றுநீரில் தேற்றம்காணவா
ஆறறிவு ஆற்றல்தனை நேற்றிரவே தோற்றுவித்தாய்...?

குயவன்வடித்த களிமண் உளிதாங்கி உருவானதா...?
வயலொளிரத் துளிர்விடும் தளிரரும்புகள் எருவாவதா....?

மகரந்தமேனி திருவிடத்தை தகர்த்தெறிவது நெறிமுறையா...?
சிகரம்தொட்ட பெருஞ்சேனையே அகராதிகண்டு அறிந்திடுக...!

உரல்கொத்தும் உலக்கையொலி வரம்புமீற தரமிழக்கும்
நிரல்மறுகி இலக்குசேர உரமளித்து சிரமுயர்த்தும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-May-18, 9:22 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 106

மேலே