விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

வற்றிய நதியில்
வெள்ளம் புரள
நெஞ்சில் தாகம் தாங்கி
காத்திருந்தேன்...
கள்ளிபழம் விடைகொடுத்தது...

நான் கவியென!
உத்தேசித்த வேளையில்
கருத்துக்களால்
உணர்ந்தேன்....

தங்கத்தை மட்டுமே
செய்து வைக்க
நான் பொற்கொல்லனல்ல...
தகரமும் சமயத்தில்
கூரைகளாகிறது
புழுதி காற்றில்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (5-May-18, 12:27 am)
பார்வை : 227

மேலே