நாடு நடப்பு
நாடு போகும் நடப்பு
சிரிப்பாஇருக்குது தம்பி
சிரிப்பா வருகுது
உரக்க சிரிச்சா கூட
வரி வருமோ தம்பி
வரி வருமோ
கூறு கெட்டு நானும்
ஓட்டு போட்டுட்டேன் தம்பி
நல்லா மாட்டிகிட்டேன்
நாட்டை விட்டு போக
வழியும் தெரியலை தம்பி
கண்ணீர் நிக்கலை
என்ன ஆகப்போகுதோ
நம்ம தேசம் தம்பி
நம்ம தேசம்