மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும்...
மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும் எவ்வாறு முடிகிறது உன்னால் மட்டும்
புன்னகை வாசம் வீச..........
நானும் பல வழிகளில் முயன்றும் தோற்று தான் போகிறேன் !
என் கவலை முகத்தை மறைக்க நான் பூசி கொண்ட சாயம் சிரிப்பு என்பது
என் கண்களுக்கு கூட தெரியாமல் இதயத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் .........
ஏனென்றால் என் கண்களில் வழியும் கண்ணீர் காட்டி கொடுத்து விடுமென்று!