பிரிந்தா புஷ்பாகரன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரிந்தா புஷ்பாகரன்
இடம்:  Batticaloa, SriLanka.
பிறந்த தேதி :  29-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Sep-2011
பார்த்தவர்கள்:  1400
புள்ளி:  746

என்னைப் பற்றி...

காலம் கடந்து
என் கருத்தினை
விதைத்தாலும்
களம் தர மறுப்பதில்லை
நன்றி யென் நண்பர்களே.......

என் படைப்புகள்
பிரிந்தா புஷ்பாகரன் செய்திகள்
பிரிந்தா புஷ்பாகரன் - பிரிந்தா புஷ்பாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2023 3:09 pmவெறுமை.....
------++++++------

ஆயிரந் தேடி
ஆடியோடித் தேய்ந்து
ஆரவாரங்கண்டு.....

தேடிய சொத்தும்
தேடலின் வித்தும்
தீர்ந்துபோக.....

ஆசைகள் ஓய்ந்து
அனுபவந் தோய்ந்து
இனிமைகள் கழிந்துபோக....

ஓடிய காலுமோய்ந்து
வீரியம் முழுதும் தேய்ந்து
ஒற்றைப் படுக்கையிலே....

ஒட்டிய உடலோடு
ஒடுங்கிய பார்வையூடே
வெறித்துப் பார்க்கையிலே.....

வெதும்பிய மனதில்
விரிந்தோடும் நினைவில்
நிஜத்தில் யாவும்
வெறுமையாய்......


...பிரிகரன்.....
.

மேலும்

பிரிந்தா புஷ்பாகரன் - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2023 7:07 pm

ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?

மேலும்

வலிமயானவர், தூய்மையானவர் 22-Sep-2023 11:00 pm
தழுவுதல் 16-Sep-2023 5:08 pm
அரவணைப்பது 21-Aug-2023 5:04 am
தழுவுதல் புணர்ச்சி கட்டிக்கொள்ளுதல் 05-Aug-2023 10:40 amவெறுமை.....
------++++++------

ஆயிரந் தேடி
ஆடியோடித் தேய்ந்து
ஆரவாரங்கண்டு.....

தேடிய சொத்தும்
தேடலின் வித்தும்
தீர்ந்துபோக.....

ஆசைகள் ஓய்ந்து
அனுபவந் தோய்ந்து
இனிமைகள் கழிந்துபோக....

ஓடிய காலுமோய்ந்து
வீரியம் முழுதும் தேய்ந்து
ஒற்றைப் படுக்கையிலே....

ஒட்டிய உடலோடு
ஒடுங்கிய பார்வையூடே
வெறித்துப் பார்க்கையிலே.....

வெதும்பிய மனதில்
விரிந்தோடும் நினைவில்
நிஜத்தில் யாவும்
வெறுமையாய்......


...பிரிகரன்.....
.

மேலும்

பிரிந்தா புஷ்பாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 8:53 pm

இதமாய் வருடிய காற்றின்
இலையசை ஓசையில்
உனக்கும் எனக்குமான
கூடலின் இசையைக் கேட்டேன்

மாலை மதிமயக்கக் கூட்டமாய்
மன நிறைகாதலுடன்
பேசிச்சென்ற கிளியிடத்தே
உனக்குமெனக்குமான காதல் கண்டேன்


விடிவானின் நடுவே
விடிவெள்ளி தெரிய
மின்மினிகள் போன்றே
அவற்றிடையும் ஸ்பரிசம்

அங்கேயும் அதிலேயும்
நம் காதலைக் கண்டேன்
எங்கும் நீ
எதிலும் நீ
எல்லாமாகவும் நீ

ஆதலாலே
வேண்டும்
எப்போதும் நீ....!

மேலும்

sirappu 05-Nov-2022 5:29 pm

காதலே நீ நீங்கிச்செல்.....!

நித்தமும் உன்னுள் 
தொலைகிறேன்

ஆசைக் கனவுகள் 
அகத்தில் கனக்க

தூண்டலில் மீனாக
துடிக்கின்ற மனதை

தூரம் நின்றே
நீயும் ரசிக்க

விடிந்திடா என்
இரவின் அணைப்பில்

உள்ளத்தின் துக்கம்
உன்னைத் தேட

நீயோ என்னை
நீங்கிச் செல்கின்றாய்

என் வலிதனை
உணராது

ஆதலால் காதலே
நீ என்னை 
நீங்கிச்செல்....!

பிரிகரன்

மேலும்

பிரிந்தா புஷ்பாகரன் - தமிழ்ப்பிரியன் முத்துக்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2022 8:01 pm

வண்ணங்கள், நிறங்கள் வேறுபாடு தருக

மேலும்

வண்ணங்கள் எப்பொழுதும் அழகானவை... நம் மனதோடு ஒட்டிக்கொண்டவை... நிறங்கள் சாதாரணமானவை இரசிக்கப்படும் வேளை வண்ணமாகிடும்... 20-May-2022 2:12 pm
வண்ணங்கள் என்பது நமது ரசனைக்கு ஏற்ப தீட்டுவது. நிறங்கள் என்பது இயற்கையாக அமைந்த ஒரு விஷயம். 19-May-2022 2:35 am
பிரிந்தா புஷ்பாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2013 9:12 pm

இமையோடு இமைசேரும் போதுஇருளிற்குள் படமாகஆழ்மனதின் கிடக்கைகளைஅள்ளித்தெளிக்கின்றாய்சொப்பனத்தில்.....அஸ்த்தமித்துப்போனஆயுள்ரேகையின்ஆரம்பத்தை துளிர்க்கச்செய்துஆலமர விழுதாகஆணிவேரோடுஆழ்ந்து ஊன்றிக்கொண்டாய்....ஆசைகளோடுஆனந்தம்பொங்கிய தருணங்கள்அசைபோடும்போதெல்லாம்

மேலும்

பிரிந்தா புஷ்பாகரன் - Selvakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2020 12:32 am

Karaiyoram pirithu Aluthuga

மேலும்

கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும். அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல். 23-Jan-2021 9:00 pm
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி. உதாரணம் ஊரோரம் = ஊரின் ஓரம் தேரருகே = தேரின் அருகே காரேறி = காரில் ஏறி 07-Sep-2020 7:10 pm
கரை+ ஓரம் 04-Sep-2020 12:52 am
கரை+ஓரம் 02-Sep-2020 4:07 pm
பிரிந்தா புஷ்பாகரன் - seethala98 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2020 5:05 pm

                ஏன் பிறிந்தாய் ???


கால் பதித்த கரை சொல்லும்,
கரை நனைத்த கடலும் சொல்லும்,   

காற்றடித்த மரம் சொல்லும்,
காய்க்க மறந்த கள்ளியும் சொல்லும்,   

கண் அயர்ந்தால் கனவு சொல்லும், 
இமை மூடினால் இரவும் சொல்லும்,   

இதழ் பதித்த இடம் சொல்லும், 
இடை தொட்ட கரமும் சொல்லும்,    

இச்சை தீர்த்த இன்பம் சொல்லும், 
இவளின் மாய பிம்பம் சொல்லும்,  

இத்தனையும் சொல்லியும் 
இவள் நினைவு எட்டவில்லையடா உனக்கு….!   

மாய விழி கொண்டு மயக்கிய மாபாதகனே !!! 
மங்கை இவள் மயக்கம் தீர 

மார்பில் அணைத்து மருந்து தருவாயோ,   
ஆறாத காயம் தருவாயோ.. 
மாறாத மாற்றம் தருவாயோ… 
மாறாக மரணம் தருவாயோ…   

யாதொன்று தந்தாலும் யான் என்றும் உனை பிறியேன்… 
யாதுமாகி நின்றவனே நீ என்னை ஏன் பிறிந்தாய் !!! சொல் ???         

மேலும்

பிரிந்தா புஷ்பாகரன் - பிரிந்தா புஷ்பாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2020 10:05 pm

உனக்காக ஒரு கவி.....!

கருவிலே உருவான
கவியே....
கவலைகள் களையவந்த இசையே...
கண்ணுக்குள் நிறைந்த ஒளியே...
கண்ணியமாய்க் காத்திடுவோம் உனையே....!

பேறுபெற்றோம் ஆதலாலே உன்னை....
பேறுகொண்டோம்....
பேசும்மொழி அதிலே எமை மறந்தோம்...
பேச்சினாலே கொள்ளைகொண்ட பேரழகே....!

தந்தைக்கும் தந்தையாகி...
தாயிற்கும் தந்தையாகி...
தாங்குமுந்தன் அன்பிற்கு...
தகுமோ வார்த்தை ஏதும் கூறிவிடின்.....?

உள்ளத்தால் வெள்ளையிவன்...
உயிர்கொள்ளை கொண்ட கண்ணன்...
உறவுக்குள் உயர்வு இவன்....
உள்ளங் கவர்ந்திட்ட மன்னனும் இவனே....!

விடியலாய் வந்துதித்தான்...
விழியிற்குள் நிறைந்து நிற்பான்....
விந்தை பலபுரிந்து...
விலைமதிப்பில்லா இன்பந்தரும் இறைவரமும் இவனே.....!

இருளுக்குள் ஒளியாக....
இமைக்குள் விழியாக....
இயற்கையின் அற்புதமாய் எனக்குள் உருவான....
இணையற்ற ஓருறவே....!

அழகிய புன்னகையால்...
அனைத்தையும் சாதிப்பான்...
அகரத்தை அழகாக ....
அர்த்தமுடன் உச்சரிப்பான்...!

அவனை வர்ணித்தால்....
அவனுக்காய்க் கவிவடித்தால்...
அடங்காது ஒரு கவியில்...
அவன் புகழாரம் பாட....!

தொடர் கவியாய்ப் பாடுகிறேன்...
தொடங்கிய இக் கவியை...
தொடர் காவியமாய் ஆகிட்டும்...
தொழுதே ஆசீ கூறும் என்செல்வன் நீடூழி வாழவென....!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (68)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (68)

சிவா

சிவா

Malaysia
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
user photo

SekarGV

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (69)

tamilan

tamilan

மதராசபட்டினம்
A. Prem Kumar

A. Prem Kumar

Chennai

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே