நீ வேண்டும்
இதமாய் வருடிய காற்றின்
இலையசை ஓசையில்
உனக்கும் எனக்குமான
கூடலின் இசையைக் கேட்டேன்
மாலை மதிமயக்கக் கூட்டமாய்
மன நிறைகாதலுடன்
பேசிச்சென்ற கிளியிடத்தே
உனக்குமெனக்குமான காதல் கண்டேன்
விடிவானின் நடுவே
விடிவெள்ளி தெரிய
மின்மினிகள் போன்றே
அவற்றிடையும் ஸ்பரிசம்
அங்கேயும் அதிலேயும்
நம் காதலைக் கண்டேன்
எங்கும் நீ
எதிலும் நீ
எல்லாமாகவும் நீ
ஆதலாலே
வேண்டும்
எப்போதும் நீ....!