எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெறுமை..... ------++++++------ ஆயிரந் தேடி ஆடியோடித் தேய்ந்து ஆரவாரங்கண்டு........வெறுமை.....
------++++++------

ஆயிரந் தேடி
ஆடியோடித் தேய்ந்து
ஆரவாரங்கண்டு.....

தேடிய சொத்தும்
தேடலின் வித்தும்
தீர்ந்துபோக.....

ஆசைகள் ஓய்ந்து
அனுபவந் தோய்ந்து
இனிமைகள் கழிந்துபோக....

ஓடிய காலுமோய்ந்து
வீரியம் முழுதும் தேய்ந்து
ஒற்றைப் படுக்கையிலே....

ஒட்டிய உடலோடு
ஒடுங்கிய பார்வையூடே
வெறித்துப் பார்க்கையிலே.....

வெதும்பிய மனதில்
விரிந்தோடும் நினைவில்
நிஜத்தில் யாவும்
வெறுமையாய்......


...பிரிகரன்.....
.

நாள் : 15-Sep-23, 3:09 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே