காதலே நீ நீங்கிச்செல்.....! நித்தமும் உன்னுள் தொலைகிறேன் ஆசைக்...
காதலே நீ நீங்கிச்செல்.....!
நித்தமும் உன்னுள்
தொலைகிறேன்
ஆசைக் கனவுகள்
அகத்தில் கனக்க
தூண்டலில் மீனாக
துடிக்கின்ற மனதை
தூரம் நின்றே
நீயும் ரசிக்க
விடிந்திடா என்
இரவின் அணைப்பில்
உள்ளத்தின் துக்கம்
உன்னைத் தேட
நீயோ என்னை
நீங்கிச் செல்கின்றாய்
என் வலிதனை
உணராது
ஆதலால் காதலே
நீ என்னை
நீங்கிச்செல்....!
பிரிகரன்