சிலையாய் அவள்

அவ்விரண்டு கண்களும்
எவ்வகை மலர்களோ
அங்கே காங்கையில்
கண்டேன் கங்கையை ...

நாவிரண்டு திசையிலும்
பாவகை ஒலிக்க பாவையை
கண்டேன் பாதையில்....

ஈரைந்து மாதம் கருவரை
கண்ட குழலியின் பொன்
சிரிப்பை அவளின் இதழில் கண்டேன்...

மூவிரண்டு சுவையையும்
அவளை கண்டு
அருந்திய தேனீரில்
கண்டேன்...

செவ்வனே செய்த சிலை
அவ்வண்ணமே உதிர்ந்த கலை
கண்டேன் அவளை....
-இந்திரா
        

எழுதியவர் : இந்திரா (29-Apr-23, 4:07 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 164

மேலே