இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்

இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?

இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரியை சொல்லு என்றால் அது நகைசுவைக்கோ அல்லது தெரியாமலோ "ஆச்சிமசாலா வாங்குவோம் " என்றுதான் சொல்லும் இருந்து பாருங்கள். கிந்தி திணிப்பு சமஸ்கிரத திணிப்பு என்று போராடும் தமிழ் நாட்டு தமிழ் ஆர்வளர்கள் ஒரு புரட்சி கவிதையையும் கவிஞ்ரையும் இழிவுபடுத்துவதை ஏன் கவனிக்கவில்லை...?
@
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Mar-18, 6:11 pm)
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே