விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு –

9-3-18 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் –ஒரு அரிய தொகுப்பு! –

ச.நாகராஜன்





உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ்களான நேச்சர், ஸயிண்டிஃபிக் அமெரிக்கன், ஸ்பேஸ், லைவ் ஸயின்ஸ் இவை அனைத்தையும் வாங்கிக் கட்டுபடியாகாது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தக் கவலையின்றி அனைத்து முக்கிய அறிவியல் தகவல்கலையும் இங்கு படித்து மகிழலாம்.

50 ஆண்டு கால் சாதனைகளின் தொகுப்பு தொடர்கிறது:

குறுகிய கால விண்வெளிக் கல மிஷன்

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் விண்கலமான ஃப்ரீடம் 7இல் 15 நிமிடங்களே பறந்தார். இப்படிப் பறந்த முதல் அமெரிக்கர் என்ற புகழை ஈட்டினார். 115 மைல் உயரத்தில் பறந்த அவர் புறப்பட்ட ஃப்ளோரிடா தளத்திற்கு 302 மைல் தள்ளி அட்லாண்டிக்கில் தொப்பென இறங்கினார். 1971இல் அபல்லோ 14இல் சந்திரனுக்கு அவர் சென்ற போது 47 வயதான அவர் இன்னொரு உலகின் பரப்பில் நடநத அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதிக தூரம் சென்றவர்

பூமியிலிருந்து அதிக தூரம் சென்ற ரிகார்டு 47 வருடமாக முறியடிக்கப்படவில்லை.1970 ஏப்ரலில் அபல்லொ 13 மிஷனில் கலம் சந்திரனின் எதிர்ப் பக்கம் சென்றது. 158 மைல் உயரத்தில் பறந்த அது 2,48,655 மைல் தூரம் தள்ளி இருந்தது. இதுவே பூமியை விட்டுச் சென்ற அதிக பட்ச தூரமாகும்.





அதிக நேரம் விண்வெளியில் கழித்தோர்

ரஷிய விண்வெளி வீரர் ஜென்னடி பாடல்கா 878 நாட்கள் 5 விண்கலப் பயணங்களில் இருந்துள்ளார். அமெரிக்க பெண்மணி பெக்கி விட்ஸன் 665 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

நீண்டகாலம் தொடர்ந்து விண்ணில் இருந்த கலம்

இந்தப் பெருமை இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனைச் சாரும்.100 பில்லியன் டாலர் செலவில் சுழலும் லாப் கலமான இது 2000, நவம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் தொடர்ந்து யாரேனும் இருந்து வருகின்றனர். அக்டோபர் 31, 2000இல் ஸ்டேஷனுக்கான க்ரூ அனுப்பப்பட்டதையும் சேர்த்தால் இரு நாட்கள் அதிகம். ஆக இது தான் விண்வெளியில் மனிதர் இருக்கும் அதி நீண்ட காலம்!

நீண்ட ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்

கொலம்பியா STS -80 கலம் 1996, நவம்பர் 19இல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டப்படி டிசம்பர் 5இல் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் காலநிலை சரியில்லை. ஆக இரு நாட்கள் கழித்துத் திரும்பியது. ஆக இது விண்ணில் இருந்த நேரம், 17 நாட்கள், 16 மணி நேரம். இது தான் அதிக பட்ச நேரம் கொண்ட ஷட்டில் மிஷன்!



சந்திரனில் அதிக நேரம்

1972, டிசம்பரில் ஹாரிஸன் ஷ்மிட், யூஜென் கெர்னான் ஆகியோர் அபல்லோ 17 இல் பறந்து 75 மணி நேரம் – மூன்று நாட்களுக்கும் மேலாகக் கழித்தனர். சந்திரப்பரப்பை ஆராய்ந்தனர். மொத்தம் 22 மணி நேரம் மூன்று முறை நடந்தனர்.

1969 ஜூலை 20இல் அபல்லோ 11இல் பறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ஈகிள் ல்யூனர் மாடுலில் இறங்கினார். அவரது சகா பஸ் அல்ட்ரின் பின்னால் இறங்கினார். 2 மணி நேரம் 31 நிமிடம் நடை நீடித்தது. இது ஹாலிவுட் படம் ஒன்றின் நீளம் என்பது அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை!

அதிவேக விண் பயணம்

அபல்லோ 10 சந்திரப் பயணம் பயங்கர வேகத்தைக் கொண்டதாக இருந்தது. 24,701 மைல் பர் ஹவர். 1969 மே 26இல் இது திரும்பி பூமிக்கு வந்தது. இதுவே இதுவரையிலான உச்ச பட்ச ஸ்பீட்!

அடுத்த இரண்டு மாதத்தில் நிகழ விருக்கும் பிரம்மாண்ட உலக சாதனைக்கான ஒரு சோதனை முன்னோட்டமாக இருந்தது இது.

விண்வெளி வீரர் மேற்கொண்ட அதிகபட்ச பயணங்கள்

இரு நாஸா வீரர்களான ஃப்ராங்க்ளின் சாங்-டையஸ், ஜெர்ரி ரோஸ் ஆகிய இருவரும் ஏழு முறை நாஸா ஷட்டில்களில் பயணித்துள்ளனர். சாங் 1986 முதல் 2002 முடியவும் ரோ 1985 முதல் 2002 முடியவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.



அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கொரிய வீராங்கனையான சோயியான் யி (Soyeon Yi), இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமான தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஷிய சோயுஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருநதார்.

ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து கலம் விடுபடும் போது அவசரமாக விடுவிக்கவேண்டியதாயிற்று..அத்னால் சீக்கிரம் வரும் பாதை மாறி பின்னர் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டது..

க்லம் வளிமண்டலத்தில் கீழே தானாகவே அதன் அழுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக, அதலபாதாளத்தில் அபாயகரமாக கல்ம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக் மூன்று நான்கு ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பாதுகாப்பை உறுதி செய்யும். அன்று ஒரு ஹெலிகாப்டரையும் காணோம்.

கலம் தானாக தரையில் மோத சோயியான் யி கதவைத் தானே திறக்க அங்க சற்று தூரத்தில் இருந்த ஆட்டிடையர்கள் திகைத்துப் போனார்கள்.





புல்வெளியில் படுத்துக் கிடந்த அவரை கழகஸ்தானிய இடைப் பெண்மணி ஒருத்தி தூக்கி உதவினார். அவர்களுக்கு விண்வெளித் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. விண்வெளி சூட்டை அணிந்திருந்த அவர்கள் அயல்கிரக வாசிகள் போலவே தோற்றம்ளித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து சோயுஸ் க்லத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவரை வெளியில் கொண்டு வந்து உதவினர்.

கள்ளங்கபடமில்லாத அவர்களிடம் மொபைல் இருக்கிறதா என்று கேட்க அவர்கள் திகைத்தனர்.. பின்னர் கலத்தினுள் சென்று ஜிபிஎஸ் உதவியுட்ன் இருக்குமிடத்தை நிரணயித்து கலத்தின் மூலமாகவே கீழே உள்ள தரை ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டனர்.

கடைசியாக 300 மைல் தொலைவிலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது.

முதல் முதலில் விண்ணுக்கு ஏகி பூமி திரும்பும் தங்கள் முதல் வீராங்கனை தரை இறங்குவதை கொரியர்கள் ஆவலாகப் பார்த்த போது இந்த விபரீதம் ஏற்படவே அனைவரும் கலங்கிப் போனார்கள்.

கடைசியில் எல்லாம் சுபம் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.



“வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபமாக இது ஆனது என்றார் சோயியான் யி!



Share this:

எழுதியவர் : (22-Mar-18, 6:00 pm)
பார்வை : 42

மேலே