விலைமகள் வலி

கட்டியவன் புட்டி தொட்டான்;
கைப்பிள்ளை உடன் என்னைக்
கைவிட்டான்!
உடலில்
உதிரம் வற்றிருந்தால்,
உயிரை உதறி சென்றிருப்பேன்!
மார்பு வற்றியது!
மகளே! உன்
வயிற்றுத் தீ நெஞ்சு பற்றியது!
மானம் விற்றேன்!
மானியம் தந்து சென்றான்!
மெய் விற்றேன்!
மொய் வைத்துச் சென்றான்!
உடல் நுழைத்த வலிகூட
வலிக்கவில்லை மகளே!
வலிக்கிறது...
என்னுடல் புசித்தவனும்
உத்தமன்
வேசமிட்டு உன்னை
வேசிமகள் என்று ஏசயிலே...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (17-Aug-18, 1:39 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : vilamakal vali
பார்வை : 141

மேலே